பொருநராற்றுப்படை
141 - 160 of 248 அடிகள்
141. முலைக்கோள் விடாஅ மாத்திரை
ஞெரேரெனத்
தலைக்கோள்
வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம்
போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய்
வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ்
சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு
வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித்
தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார்
கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல்
மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன்
னிற்குவி ராயிற் பழுதின்
விளக்கவுரை :
151. றீற்றா விருப்பிற் போற்றுபு
நோக்கிநும்
கையது
கேளா அளவை ஒய்யெனப்
பாசி
வேரின் மாசொடு குறைந்த
துன்னற்
சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக்
கரைய பட்டுடை நல்கிப்
பெறலருங்
கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ்
தேறல் வாக்குபு தரத்தர
வைகல்
வைகல் கைகவி பருகி
எரியகைந்
தன்ன வேடில் தாமரை
சுரியிரும்
பித்தை பொலியச் சூட்டி
விளக்கவுரை :