பொருநராற்றுப்படை 121 - 140 of 248 அடிகள்



பொருநராற்றுப்படை 121 - 140 of 248 அடிகள்

121. செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்

விளக்கவுரை :

131. முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி

விளக்கவுரை :

பொருநராற்றுப்படை, முடத்தாமக் கண்ணியார், பத்துப்பாட்டு, porunaratrupadai, mudaththama kanniyaar, paththu paattu, tamil books