கலித்தொகை 121 of 150 தொகைகள்
121.
ஒள் சுடர் கல் சேர, உலகு
ஊரும் தகையது,
தெள் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப்,
புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி
ஆன்று,
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!
விளக்கவுரை :
தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத்
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே -
உறையொடு வைகிய போது போல், ஒய்யென,
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு;
விளக்கவுரை :
வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு,
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே -
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ்
உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;
விளக்கவுரை :
இன் துணை நீ நீப்ப, இரவின் உள் துணை ஆகித்,
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே -
ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு;
விளக்கவுரை :
என ஆங்கு;
எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி
தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.
விளக்கவுரை :