1521. பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா
மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர்
கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும்
முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில்
வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை
உறுக்கும்.
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1531. வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப்
பாயின்
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன்
சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர்
கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர்
எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும்
கூடும்,
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
விளக்கவுரை :