1321. காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர்
மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர்
செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை
நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1331. களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர்
கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை
ஆர்ப்பவும்
கலம்பெறா நுசுப்பினள் காதல்
நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை
நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
விளக்கவுரை :