1301. இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த்
தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப்
படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1311. விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ்
சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும்
கொண்ட
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
விளக்கவுரை :