1121. ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி.
வேறு (சார்த்து வரி)
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய்
மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும்
மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய
வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும்
புகாரே எம்மூர்.
மறையின் மணந்தாரை வன்பரதர்
பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம்
எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம்
நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும்
புகாரே எம்மூர்.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1131. உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி
என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால்
மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்தூர்க்கும்
புகாரே எம்மூர்.
வேறு (திணை நிலைவரி)
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன்
நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும்
நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச்
சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம்
உணரேனால்.
தம்முடைய தண்ணளியும் தாமும்தம்
மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
விளக்கவுரை :