சிலப்பதிகாரம் 1021 - 1040 of 5288 அடிகள்


சிலப்பதிகாரம் 1021 - 1040 of 5288 அடிகள்

silapathikaram

(கானல் வரி)

1021. நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள்
ஓப்புதல் தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி
நறுஞாழல் கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று
ஆண்டுஓர் அணங்குஉறையும் என்பது
அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ.
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி விலைமீன் உணங்கல்
பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு

விளக்கவுரை :

[ads-post]

1031. வேறுஓர் கொலைவேல் நெடுங்கண்
கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த்
தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே.
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.

விளக்கவுரை :

சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், silappathikaaram, elango adikal, tamil books