சிலப்பதிகாரம் 1001 - 1020 of 5288 அடிகள்


சிலப்பதிகாரம் 1001 - 1020 of 5288 அடிகள்

silapathikaram

1001. மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.
மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்

விளக்கவுரை :

[ads-post]

1011. போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.

வேறு (முகம் இல் வரி)

துறைமேய் வலம்புரி தோய்ந்து
மணல்உழுத தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து
நுண்தாது போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண்
செய்த உறைமலி உய்யாநோய்
ஊர் சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.

விளக்கவுரை :

சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், silappathikaaram, elango adikal, tamil books