திருமுருகாற்றுப்படை 61 - 80 of 317 அடிகள்



திருமுருகாற்றுப்படை 61 - 80 of 317 அடிகள்

61. எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்,-
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து

விளக்கவுரை :

71. மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கஞ்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வஞ்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன் ; அதாஅன்று,

2. திருச்சீர் அலைவாய்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்

விளக்கவுரை :

திருமுருகாற்றுப்படை, நக்கீரர், பத்துப்பாட்டு, thirumurukatrupadai, nakkeerar, paththu paattu, tamil books