நற்றிணை 231 - 235 of 400 பாடல்கள்
231. நெய்தல் - இளநாகனார்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே
- சிறைப்புறமாகத் தோழி சொல்லி வரைவு
கடாயது
விளக்கவுரை :
232. குறிஞ்சி - முதுவெங்கண்ணனார்
சிறு கண் யானைப் பெருங் கை ஈர் இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட காமம் நல்கென
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே
- பகல் வருவானை இரவு வா எனத் தோழி
சொல்லியது
விளக்கவுரை :
233. குறிஞ்சி - அஞ்சில் ஆந்தையார்
கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்
இனி என கொள்ளலைமன்னே கொன் ஒன்று
கூறுவென் வாழி தோழி முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌ¢மே
- வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக
இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து சிறைப்
புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது \
விளக்கவுரை :
234.
நெருநலும் முன்னாள்
எல்லையும் ஒருசிறை
புதுவை ஆகலின் கிளத்தல் நாணி
நேர் இறை வளைத் தோள் நின் தோழி செய்த
ஆர் உயிர் வருத்தம் களையாயோ என
எற் குறை உறுதிர் ஆயின் சொற் குறை
எம்பதத்து எளியள் அல்லள் எமக்கு ஓர்
கட் காண் கடவுள் அல்லளோ பெரும
ஆய்கொல் மிளகின் அமலை அம் கொழுங் கொடி
துஞ்சு புலி வரிப் புறம் தைவரும்
மஞ் சுசூழ் மணிவரை மன்னநன் மகளே
- இவ்விரண்டில் ஏதோ ஒன்று நற்றிணை
மறைந்து போன பாடலாகலாம்
விளக்கவுரை :
235. நெய்தல் - அறியப்படவில்லை
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணிக் கலி மாக் கடைஇ
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே
- வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி
வரைவு மலிந்தது
விளக்கவுரை :