கலித்தொகை 105 of 150 தொகைகள்
105.
அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின்
தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச்-
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடித்,
'தீது இன்று பொலிக!' என
தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இரும் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு
உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடும் சினப் புகரும்
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயுஉம்
கால முன்பின் பிறவும், சால
மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ.
விளக்கவுரை :
அவ் வழி;
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறக் கோதையர் அணி நிற்பச்,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப்
பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து.
விளக்கவுரை :
மருப்பில் கொண்டும், மார்பு உற தழீஇயும்,
எருத்து இடை அடங்கியும், இமில்
இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து
பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக்,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு.
விளக்கவுரை :
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டு வாய் சாக் குத்திக்,
கொள்வார் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா-
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
விளக்கவுரை :
பாடு ஏற்றவரைப் படக் குத்திச் செங் காரிக்
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா-
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
விளக்கவுரை :
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா-
வாள் பொரு வானத்து, அரவின் வாய் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
விளக்கவுரை :
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ;
வெல் புகழ் உயர்நிலைத் தொல் இயல் துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கிப்,
பாடு இல, ஆய மகள் கண்.
விளக்கவுரை :
நறு நுதால்!- என் கொல்- ஐங்கூந்தல் உளரச்
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி,
ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன்
கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
விளக்கவுரை :
நெட்டிரும் கூந்தலாய்! கண்டை, இஃது
ஓர் சொல்;
கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
தம் கண் பொடிவது எவன்?
விளக்கவுரை :
ஒள் நுதால்
இன்ன உவகை பிறிது யாது-யாய் என்னைக்
கண் உடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
அலர் செய்துவிட்டது இவ் ஊர்?
விளக்கவுரை :
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு- ஒள் இழாய்!-
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது- அன்று, அவன்
மிக்குத் தன் மேல் சென்ற செங் காரிக் கோட்டு இடைப்
புக்கக் கால் புக்கது, என் நெஞ்சு!
விளக்கவுரை :
என;
பாடு இமிழ் பரப்பு அகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியான் பரவுதும்-'நாடு
கொண்டு
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
இமையத்து உம்பர் உம் விளங்குக!' எனவே.
விளக்கவுரை :