901. பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால்
விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு
விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர்
விளக்கமும்,
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை
விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில்
விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா
விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
911. எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில்
மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப்
பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
விளக்கவுரை :