பொருநராற்றுப்படை 61 - 80 of 248 அடிகள்



பொருநராற்றுப்படை 61 - 80 of 248 அடிகள்

61. ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின்
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி

விளக்கவுரை :

71. இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த

விளக்கவுரை :

பொருநராற்றுப்படை, முடத்தாமக் கண்ணியார், பத்துப்பாட்டு, porunaratrupadai, mudaththama kanniyaar, paththu paattu, tamil books