குறுந்தொகை 371 - 375 of 401 பாடல்கள்
371.
குறிஞ்சி
- தலைவி கூற்று
கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே.
- உறையூர் முதுகூற்றனார்.
விளக்கவுரை :
372.
நெய்தல்
- தோழி கூற்று
பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு
மாயக்
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழங்க லூரே.
- விற்றூற்று மூதெயினனார்.
விளக்கவுரை :
373.
குறிஞ்சி
- தோழி கூற்று
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே.
- மதுரைக் கொல்லம் புல்லனார்.
விளக்கவுரை :
374.
குறிஞ்சி
- தோழி கூற்று
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வௌிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே.
- உறையூர்ப் பல்காயனார்.
விளக்கவுரை :
375.
குறிஞ்சி
- தோழி கூற்று
அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்
யாமங் காவலர் அவியா மாறே.
- பெயர் அறியப்பட வில்லை..
விளக்கவுரை :