பெரும்பாணாற்றுப்படை
361 - 380 of 500 அடிகள்
361. தீம்பஃ றார முனையிற் சேம்பின்
முளைப்புற
முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
மழைவீழ்ந்
தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ்
தெங்கின் முப்புடைத் திரள்கா
யாறுசெல்
வம்பலர் காய்பசி தீரச்
சோறடு
குழிசி யிளக விழூஉம்
வீயா
யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர
நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய்
மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா
வள்ளியின் வளம்பல தரூஉம்
விளக்கவுரை :
371. நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ்
சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப்
பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை
பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற்
காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக்
குருகின் புன்புற வரிப்பூக்
காரகற்
கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ்
வட்டம் பால்கலந் தவைபோ
னிழறாழ்
வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால்
கழீஇய பொழிறொறுந் திரள்காற்
விளக்கவுரை :