குறுந்தொகை 361 - 365 of 401 பாடல்கள்



குறுந்தொகை 361 - 365 of 401 பாடல்கள்

361. குறிஞ்சி - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி அன்னைக்
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே.

                                      - கபிலர்.

விளக்கவுரை :

362. குறிஞ்சி - தோழி கூற்று

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

                                      - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.

விளக்கவுரை :

363. பாலை - தோழி கூற்று

கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப்
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே.

                                      - செல்லூர்க் கொற்றனார்.

விளக்கவுரை :

364. மருதம் - இற்பரத்தை கூற்று

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.

                                      - ஔவையார்.

விளக்கவுரை :

365. குறிஞ்சி - தோழி கூற்று

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே.

                                      - மதுரை நல்வெள்ளியார்.

விளக்கவுரை :

குறுந்தொகை, எட்டுத் தொகை, Kurunthogai, ettu thogai, tamil books