பெரும்பாணாற்றுப்படை
281 - 300 of 500 அடிகள்
281. வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன்
சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன்
பெய்த கவல்பிணி பைந்தோற்
கோள்வல்
பாண்மகன் றலைவலித் தியாத்த
நெடுங்கழைத்
தூண்டி னடுங்கநாண் கொளீஇக்
கொடுவா
யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை
கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப்
பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை
நெருங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு
ளொண்பூ வடைத லோம்பி
விளக்கவுரை :
291. யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு
வானத்துக் குறைவி லேய்ப்ப
வரக்கிதழ்க்
குவளையொடு நீல நீடி
முரட்பூ
மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந
ரிட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநாள
ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன்
றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு
மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை
கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க்
கிள்ளை மறைவிளி பயிற்றும்
விளக்கவுரை :