பெரும்பாணாற்றுப்படை
181 - 200 of 500 அடிகள்
181. புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி
நரம்பின்
வில்யா
ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற்
பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார்
வியன்புலம் போகி முள்ளுடுத்
தெழுகா
டோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத்
தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள்
புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட்
டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர்
பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ
வானத்துப் பாமழை கடுப்பக்
விளக்கவுரை :
191. கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற்
பூளைப் பூவி னன்ன
குறுந்தாள்
வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர்
வேங்கை வீகண் டன்ன
வவரை
வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை
மூரற் பெறுவிர் ஞாங்கர்க்
குடிநிறை
வல்சிச் செஞ்சா லுழவர்
நடைநவில்
பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா
யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக
முழுக்கொழு மூழ்க வூன்றித்
விளக்கவுரை :