பொருநராற்றுப்படை 1
- 20 of 248 அடிகள்
பாடியவர்
:
முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன்
: சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை
: பாடாண்திணை
துறை
: ஆற்றுப்படை
பாவகை
: ஆசிரியப்பா
மொத்த
வரிகள் : 248
1. அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்
சாறுகழி
வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல
முன்னிய விரகறி பொருந
குளப்புவழி
யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ
லுருவின் விசியுறு பச்சை
எய்யா
விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி
ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம்
பொத்திய பொதியுறு போர்வை
அளைவா
ழலவன் கண்கண் டன்ன
துளைவாய்
தூர்ந்த துரப்பமை யாணி
விளக்கவுரை :
11. எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா
வில்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணந்
தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள்
முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ
டிருக்கைத் திண்பிணித் திவவின்
ஆய்தினை
யரிசி யவைய லன்ன
வேய்வை
போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி
போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ்
மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்ந்
நின்ற அமைவரு காட்சி
விளக்கவுரை :