1. புகார்க் காண்டம்
1. பதிகம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
1. குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா
பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து
ஈண்டிஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள்
நீயென,
அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
11. யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள்
கேடுறக்
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன்
பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு
விளக்கவுரை :