மணிமேகலை 4621 - 4640 of 4856 அடிகள்

மணிமேகலை 4621 - 4640 of 4856 அடிகள் 

manimegalai

4621. குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம் என நோக்க
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப்
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்

விளக்கவுரை :

[ads-post]

4631. பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றி
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books