மணிமேகலை 4581 - 4600 of 4856 அடிகள்

மணிமேகலை 4581 - 4600 of 4856 அடிகள் 

manimegalai

4581. பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
"சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்"
என்றால் என்று நின்ற இடத்து
"யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே
"யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை" என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்

விளக்கவுரை :

[ads-post]

4591. மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்

30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

தானம் தாங்கிச் சீலம் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத் திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின்
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்
'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books