மணிமேகலை 4501 - 4520 of 4856 அடிகள்
4501. இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
"உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
"சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும்
அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே
விளக்கவுரை :
[ads-post]
4511. கிருத்த அநித்தம் காணப்பட்ட"
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
"சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின்
"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை
விளக்கவுரை :
மணிமேகலை 4501 - 4520 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books