மணிமேகலை 4321 - 4340 of 4856 அடிகள்

மணிமேகலை 4321 - 4340 of 4856 அடிகள் 

manimegalai

4321. சித்த வெளிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
"தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
"ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத்

விளக்கவுரை :

[ads-post]

4331. தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம்
அநித்தம் அறியப்படுதலின்" என்றால்
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books