மணிமேகலை 4281 - 4300 of 4856 அடிகள்
4281. "என் தாய் மலடி" என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
"இலகு மதி சந்திரன் அல்ல" என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
"அநித்தியத்தை நித்தியம்" என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து "சத்தம் விநாசி" என்றால்
விளக்கவுரை :
[ads-post]
4291. அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்"
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்
விளக்கவுரை :
மணிமேகலை 4281 - 4300 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books