சீவக சிந்தாமணி 1051 - 1055 of 3145 பாடல்கள்
1051. தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறு முதுக் குறைமை கேட்டே
ஊன் நைந்து உருகிக் கைத்தாய் உள் நிறை உவகை பொங்க
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று
தானையால் தடம் கண் நீரைத் துடைத்து மெய் தழுவிக் கொண்டாள்
விளக்கவுரை :
1052. துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினைப் பயத்தின் அன்றே
தகண் இலாக் கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும்
மகள் மனம் குளிர்ப்பக் கூறி மறுவலும் புல்லிக் கொண்டு ஆங்கு
அகல் மனைத் தாய்க்குச் சொன்னாள் அவளும் தன் கேட்குச் சொன்னாள்
விளக்கவுரை :
[ads-post]
1053. வினையமா மாலை கேள்வன் குபேர மித்திரற்குச் சொல்ல
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான்
வனையவே பட்ட போலும் மணி மருள் முலையி னாளைப்
புனையவே பட்ட பொன் தார்ப் புண்ணியற்கு ஈதும் என்றான்
விளக்கவுரை :
1054. கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும்
நல்தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார்
சுற்றார் வல் வில் சூடுறு செம் பொன் கழல் நாய்கன்
பொன் தார் மார்பீர் போதுமின் என்று ஆங்கு எதிர் கொண்டான்
விளக்கவுரை :
1055. சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச் செப்பின்
ஈந்தான் கொண்டார் இன்முக வாசம் எரி செம்பொன்
காந்தா நின்ற கற்பகம் அன்னீர் வரப் பெற்றேன்
சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார்
விளக்கவுரை :