சீவக சிந்தாமணி 1046 - 1050 of 3145 பாடல்கள்
1046. மவ்வல் அம் குழலினாளை மதி உடன் படுக்கல் உற்றுச்
செவ்வியுள் செவிலி சொல்லும் சிலை இவர் நுதலினாய் நின்
அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு இன்று உன் தாதை
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான்
விளக்கவுரை :
1047. பண்டியால் பண்டி செம்பொன் பல்வளை பரியம் ஆகக்
கொண்டு வந்து அடிமை செய்வான் குறை உறுகின்றது அன்றிக்
கண்டவர் கடக்கல் ஆற்றாக் கிழிமிசை உருவு தீட்டி
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1048. மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதிக் கிழவன் காளை
உத்தமன் உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான்
இத்திறத்து இவன்கண் நின்னை எண்ணினார் என்னலோடும்
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சிச் சொன்னாள்
விளக்கவுரை :
1049. மணி மதக் களிறு வென்றான் வருத்தச் சொல் கூலி ஆக
அணி மதக் களிறு அனானுக்கு அடிப் பணி செய்வது அல்லால்
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவளப் பாவை பரிவு கொண்டு அனையது ஒப்பாள்
விளக்கவுரை :
1050. கந்துகப் புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு
எந்தையும் யாயும் நேரார் ஆய் விடின் இறத்தல் ஒன்றோ
சிந்தனை பிறிது ஒன்று ஆகிச் செய் தவம் முயறல் ஒன்றோ
வந்ததால் நாளை என்றாள் வடு எனக் கிடந்த கண்ணாள்
விளக்கவுரை :