சீவக சிந்தாமணி 1056 - 1060 of 3145 பாடல்கள்
1056. யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்மின் என யாரும்
தாம் மகள் நேரார் ஆயினும் தண் என் வரை மார்பில்
பூமகள் வைகும் புண்ணியப் பொன் குன்று அனையயானுக்கு
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார்
விளக்கவுரை :
1057. சுற்றார் வல்வில் சூடுறு செம் பொன் கழலாற்குக்
குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை
மல் சேர் தோளான் தன் மருமானுக்கு அருள் செய்யப்
பெற்றேன் என்னப் பேசினன் வாசம் கமழ் தாரான்
விளக்கவுரை :
[ads-post]
1058. விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை
கடல் சூழ் வையம் கைப் படுத்தான் போன்று இது கூறக்
குடர் சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் அப்
படர் சூழ் நெஞ்சின் பாவைதன் பண்பும் அவர் சொன்னார்
விளக்கவுரை :
1059. மறையார் வேள்வி மந்திரச் செந்தீக் கொடியே போல்
குறையாக் கற்பில் சீவகன் தாயும் கொலை வேல் கண்
பொறை ஒன்று ஆற்றாப் போது அணி பொன் கொம்பு அனையாளை
நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர் கொண்டாள்
விளக்கவுரை :
1060. பொன் கச்சு ஆர்த்த பூண் அணி பொம்மல் முலையாளை
அற்கச் செய்த யாப்பினர் ஆகி அவண் வந்தார்
பொற்பக் கூறிப் போகுதும் என்றார்க்கு எழுக என்றார்
வற்கம் இட்ட வண் பரி மாவின் அவர் சென்றார்
விளக்கவுரை :