சீவக சிந்தாமணி 841 - 845 of 3145 பாடல்கள்
841. இளமுலை மணிக்கண் சேப்ப எழுது வில் புருவம் ஏறக்
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவளவாய் திகழத் தேன் சோர்
வள மலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப்புல்லி
அளமரல் இலாத இன்பக் கடல் அகத்து அழுந்தினானே
விளக்கவுரை :
842. இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக் காவு காண்பான்
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றித்
துன்னி ஓர் ஓலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்கு கின்றான்
விளக்கவுரை :
[ads-post]
843. உருமுக் கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமைக் குருப் பளிங்கில் புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த
திரு மிக்கு உடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்
விளக்கவுரை :
844. தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்னச்
சித்தம் கரிந்து ஆங்குக் கொடியான் செரு விளைத்தான்
விளக்கவுரை :
845. தேன் முழங்கு தார்க் குரிசில் செம் பொன் நெடுந் தேர் மேல்
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்
விளக்கவுரை :