சீவக சிந்தாமணி 846 - 850 of 3145 பாடல்கள்
846. வந்து தரன் கூறிய இவ் வாய் மொழியும் அன்றி
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடிப்
பந்து புடை பாணி எனப் பாயும் கலி மான் தேர்
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்
விளக்கவுரை :
847. எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்திக்
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா
விளக்கவுரை :
[ads-post]
848. ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணாப்
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
தேம் புனலை நீர்க் கடலும் சென்று தரல் இன்றே
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே
விளக்கவுரை :
849. மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
தந்த எனச் சொல்லி நனி சாமி கொடுத்தானே
விளக்கவுரை :
850. குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
வெம் கண் இளமுலையின் மிசை எழுதி விளையாடிக்
கொங்கு உண் மலர்க் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்
விளக்கவுரை :