சீவக சிந்தாமணி 836 - 840 of 3145 பாடல்கள்
836. மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை தன்னைக்
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே
விளக்கவுரை :
837. அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
முடி மணி அழுத்திச் செய்த மூரிக் காழ் நெற்றி மூழ்கக்
கடி மலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே
விளக்கவுரை :
[ads-post]
838. ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றிப் பூம்பட்டு
எந்திர எழினி வாங்கி இன் முக வாசச் செப்பும்
சந்தனச் சாந்தச் செப்பும் தண்மலர் மாலை பெய்த
இந்திர நீலச் செப்பும் இளையவர் ஏந்தினாரே
விளக்கவுரை :
839. கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன் காசு அறுதட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணிக் கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
அடைந்து வீசு ஆல வட்டம் அரிவையர் ஏந்தி ஆற்றத்
தடங் கண்கள் குவளைப் பூப்பத் தையலோடு ஆடும் அன்றே
விளக்கவுரை :
840. பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர்க் கலாபம் வீங்கச்
செந் தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து எனப் பருகினானே
விளக்கவுரை :