சிறுபாணாற்றுப்படை
21 40 of 269 அடிகள்
21. மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப்
பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை
வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும்
பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க்
கோங்கி னவிர்முகை யெள்ளிப்
பூணகத்
தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட்
பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே
றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம்
புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை
சான்ற கற்பின் மெல்லியல்
விளக்கவுரை :
31. மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந்
தசைஇய நன்மென் சீறடி
கல்லா
விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந்
தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற்
சீறியா ழிடவயிற் றழீஇ
நைவளம்
பழுநிய நயந்தெரி பாலை
கைவல்
பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா
வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ
ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந்
திருந்த முதுவா யிரவல
விளக்கவுரை :