சிறுபாணாற்றுப்படை 1 - 20 of 269 அடிகள்
பாடியவர்
: இடைக்கழி நாட்டு நல்லூர்
நத்தத்தனார்
பாடப்பட்டவன்
: ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
திணை
: பாடாண்திணை
துறை
: ஆற்றுப்படை
பாவகை
: ஆசிரியப்பா
மொத்த
அடிகள் : 269
1. மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத்
துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன
லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை
நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ்
செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித்
தன்ன காழக நுணங்கற
லயிலுருப்
பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப்
புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி
னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா
யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
விளக்கவுரை :
11. பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன்
மராஅத்த வரிநிழ லசைஇ
யைதுவீ
ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந்
திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின்
கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற்
குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய்
நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை
யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந்
தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன்
செறிந்த குறங்கிற் குறங்கென
விளக்கவுரை :