சீவக சிந்தாமணி 966 - 970 of 3145 பாடல்கள்
966. சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேங் கொள்
உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்குத்
தவறு எனத் தாமம் பூட்டித் தருதிறை கொண்டும் இன்பத்து
இவறினார் காம வெள்ளத்து ஏத்து அரும் தன்மையாரே
விளக்கவுரை :
967. சாந்து அகம் நிறைந்த தோணி தண்மலர் மாலைத் தோணி
பூந் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு எறிய ஓடித்
தாம் திரைக் கலங்கள் போலத் தாக்குபு திரியும் அன்றே
விளக்கவுரை :
[ads-post]
968. கலிவளர் களிறு கைந்நீர் சொரிவ போல் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கிப் பூஞ்சிகை அலமந்து ஆடக்
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே
விளக்கவுரை :
969. வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி
எண் அருந் திறத்து மைந்தர் எதிர் எதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல
மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே
விளக்கவுரை :
970. உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும்
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம்
இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே
விளக்கவுரை :