சீவக சிந்தாமணி 961 - 965 of 3145 பாடல்கள்
961. எரிமாலை வேல் நுதியின் இறக்கிக் காமன் அடு கணையால்
திருமாலை வெம் முலை மேல் திளைக்கும் தேவர் திரு உறுக
அருமாலை எண் வினையும் அகற்றி இன்பக் கடல் ஆக்கித்
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ
விளக்கவுரை :
962. ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கைச் செறு உழுது
நன்று ஆய நல்விரதச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர்
குன்றாமல் தாம் கொடுத்து ஐம் பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே
விளக்கவுரை :
[ads-post]
963. இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப
மைத் தலை நெடுங் கணாரும் மைந்தரும் மறலி ஆட
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டிரும் பொய்கை புக்கார்
விளக்கவுரை :
964. கலந்து எழுதிரை நுண் ஆடைக் கடிக்கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரைப் பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம்போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன் நுதல் நலத்தை உண்டார்
விளக்கவுரை :
965. தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அம்கை புறம்கையின் இசைய ஆக்கித்
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார்
விளக்கவுரை :