சீவக சிந்தாமணி 906 - 910 of 3145 பாடல்கள்
906. இன்னது ஓர் காலத்து இன்னான் ஒருமகள் இன்னது ஒன்றிற்கு
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல்
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும்
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே
விளக்கவுரை :
907. வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்திச்
செய்கழல் மன்னற்கு உய்த்துத் தன் குறை செப்பலோடும்
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கைபுனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே
விளக்கவுரை :
[ads-post]
908. சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள்
விளக்கவுரை :
909. இன்பக் காரணம் ஆம் விளையாட்டினுள்
துன்பக் காரணமாய்த் துறப்பித்திடும்
என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன்
அன்பினால் அவலித்து அழுதிட்டாள்
விளக்கவுரை :
910. தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர்
வண்ண வார் தளிர்ப் பிண்டியினான் அடிக்கு
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள்
விளக்கவுரை :