சீவக சிந்தாமணி 901 - 905 of 3145 பாடல்கள்
901. கண்கள் கொண்ட கலப்பின ஆயினும்
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்குப்
பண் கொள் தேமொழியால் பயக் கூறினாள்
விளக்கவுரை :
902. விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார்
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர்க் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரை யாடினாள்
விளக்கவுரை :
[ads-post]
903. இன்று நீர் விளையாட்டினுள் ஏந்திழை
தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீலக் கண் நித்திலம் சிந்தினாள்
விளக்கவுரை :
904. பட்டது என் நங்கைக்கு என்னப் பாசிழைப் பசும் பொன் அல்குல்
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலித் தோற்றாள்
கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள்
விளக்கவுரை :
905. பள்ளி கொள் களிறு போலப் பரிவு விட்டு உயிர்த்து என் பாவை
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்பக் கேட்டேன்
வள் இதழ்க் கோதை மற்று நகரொடும் கடியுமேனும்
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான்
விளக்கவுரை :