சீவக சிந்தாமணி 696 - 700 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 696 - 700 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

696. கரு நெறி பயின்ற குஞ்சிக் காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம் பட மிலைச்சி வாள் ஆர்
திரு நிற முகத்திற்கு ஏற்பச் செம் பொன் ஓர் ஓலை சேர்த்தி
எரி நிறக் குழை ஓர் காதிற்கு இருள் அறச் சுடர வைத்தான்

விளக்கவுரை :

697. தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை தேம் கொள்
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
மின் விரித்து அன்னயது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்

விளக்கவுரை :

[ads-post]

698. இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப் பட்ட
அரும் பெறல் சுரிகை அம் பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
பெருந் தகைக் குருசில் கொண்டு பெருவலம் சுடர வீக்கித்
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளங் குமரன் ஒத்தான்

விளக்கவுரை :

699. வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணிக் கலங்கள் தாங்கி
நுரை கிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார்

விளக்கவுரை :

700. அரக்கு நீர் எறியப் பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன
திருக் கிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறுபுலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்நதாங்கு அண்ணல் தான் ஏறினானே

விளக்கவுரை :
Powered by Blogger.