சீவக சிந்தாமணி 691 - 695 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 691 - 695 of 3145 பாடல்கள்
 
seevaga-chinthamani

691. வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
அம் சில் ஓதியார் புனைந்த செஞ் சொல் மாலை சூடினான்

விளக்கவுரை :

692. தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை அன்று அவ் அண்ணலே

விளக்கவுரை :

[ads-post]

693. இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
அன்னதால் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்னதால் படை அமைத்து எழுமின் என்று இயம்பினான்

விளக்கவுரை :

694. தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர்த் தோழன் கூறக்
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கைப்
போது உலாம் கண்ணி மைந்தர் போர்ப் புலிக் குழாத்தின் சூழ்ந்தார்

விளக்கவுரை :

695. கண் நுதல் கடவுள் சீறக் கனல் எரி குளித்த காமன்
மண் மிசைத் தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
தௌ மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்

விளக்கவுரை :
Powered by Blogger.