சீவக சிந்தாமணி 641 - 645 of 3145 பாடல்கள்
641. குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்
விளக்கவுரை :
642. ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
காட்டி எம்மைக் கொன்றாய் எனக் கைதொழுது
ஓட்டை நெஞ்சினர் ஆய் உழல்வார் களும்
விளக்கவுரை :
[ads-post]
643. திங்கள் மதி முகத்த சேலும் பவளமும்சிலையும் முத்தும்
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
அங் கை குழியா அரக்கு ஈத்த செந்தளிர் நெய் தோய்த்த போலும்
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார்
விளக்கவுரை :
644. பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழைக் கீழ் இலங்கும் ஆறும்
மன் மகர வெல் கொடியான் மால் கொள்ளக் கால் கொண்ட முலையினாளை
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார்
விளக்கவுரை :
645. கோள் வயிர நீள் அருவிக் குன்று இவர்ந்த சென்சுடர் போல் கொலை வேல் மன்னர்
நீள்வயிர வெண் மருப்பின் நீலக் களிற்றின் மேல் நிரைத் தார் பொங்கத்
தோள் வயிரம் தோன்றத் தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்கொலோ பெறுவார் என்பார்
விளக்கவுரை :