சீவக சிந்தாமணி 636 - 640 of 3145 பாடல்கள்
636. இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்குப் பூத்த போலும்
வனம் சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும் கண்மலரும் வளையல் ஆகாக்
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டு உலகம் காணார் போலும்
விளக்கவுரை :
637. மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம்
ஊன் சேர் உயிர் உய்யக் கொண்டு ஓடிப் போமின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார்
விளக்கவுரை :
[ads-post]
638. கள் வாய்ப் பெயப் பட்ட மாலைக் கருங் குழல்கள் கண்டார் நைய
உள் வாய்ப் பெயப் பட்ட வெம்மதுச் செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
புள் வாய் மணி மழலைப் பொன் சிலம்பின் இக் கொடியை ஈன்றாள் போலும்
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடிய வாறே
விளக்கவுரை :
639. செய்ய தாமரை மேல் திருவே கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ
மையில் வானவர் தம் மகளே கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்
விளக்கவுரை :
640. வீணை வென்று இவள் வெம் முலைப் பூந் தடம்
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணைப் போரில் குளிக்குவம் அன்று எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும்
விளக்கவுரை :