சீவக சிந்தாமணி 591 - 595 of 3145 பாடல்கள்
591. நட்புப் பகை உட்கினொடு நன்பொன் விளை கழனி
பட்டினொடு பஞ்சு துகில் பைம் பொன்னொடு காணம்
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
ஒட்டிப் பதினாயிரவர் உற்று முயல்கின்றார்
விளக்கவுரை :
592. வண்டு படு தேறல் நறவு வாய் விடொடு பருகிக்
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு
எண்திசையும் ஏற்பப் படுத்து ஏற்றி அதன் மேலால்
கண்டு உருகு பொன்னின் நிலம் காமுறுவ புனைந்தார்
விளக்கவுரை :
[ads-post]
593. பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி
பொன் தூண் மின் செய் பசும் பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார்
விளக்கவுரை :
594. பாவை அவள் இருக்கும் இடம் பளிக்குச் சுவர் இயற்றிக்
கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன்
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார்
விளக்கவுரை :
595. ஆய் இதழ் பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின்போல்
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய்
பாய திரை முத்த மணல் பரந்து பயின்று உளதே
விளக்கவுரை :