சீவக சிந்தாமணி 586 - 590 of 3145 பாடல்கள்
586. பாசிழைப் பரவை அல்குல் பசுங் கதிர்க் கலாபம் வீங்கக்
காசு கண் பரிய வைகிக் கடன் தலை கழிந்த பின்னாத்
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறியச் சொன்னான்
விளக்கவுரை :
587. வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேரத்
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்து வீங்கிப்
பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாளைக்
கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்தும் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
588. மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
பால் வரை மணியும் பொன்னும் பற் பல கொண்டு புக்குக்
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்
விளக்கவுரை :
589. மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனாப்
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்
விளக்கவுரை :
590. நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்து இடை நன் பொன்
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
கானத்து இடை வேங்கை எழக் கண்ணினர்கள் அன்றே
விளக்கவுரை :