சீவக சிந்தாமணி 541 - 545 of 3145 பாடல்கள்
541. பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும் பொன் கட்டில்
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
வேல் பரந்து அனைய கண்ணார் வெண் மதிக் கதிர் பெய் கற்றை
போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின்
விளக்கவுரை :
542. என்வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி
மன்னர் தம் முடிகள் வேந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழைத் தடக்கை கூப்ப
இன் உரை முகமன் கூறித் தானத்தில் இருக்க என்றான்
விளக்கவுரை :
[ads-post]
543. முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்பக்
கதிர் விரி பூணினாற்குத் தந்தை தாய் தாரம் காதல்
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான்
விளக்கவுரை :
544. இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர் காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான்
விளக்கவுரை :
545. மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்குத் தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுது எடுத்து இயம்புகின்றான்
விளக்கவுரை :