சீவக சிந்தாமணி 536 - 540 of 3145 பாடல்கள்
536. நல் நகர் நோக்கி நாய்கன் நாகம் கொல் புகுந்தது என்னப்
பொன்னகர் பொலிய புக்குப் பொங்குமா மழைகள் தங்கும்
மின் அவிர் செம் பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்குப்
பின் அவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான்
விளக்கவுரை :
537. மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆகக் கேடு
இல் சீர்க் கலுழன் ஆய கலுழ வேகற்குத் தேவி தோடு
அலர் கோதைத் தொல் சீர்த் தார் அணி சுரும்பு உண் கண்ணி
ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள்
விளக்கவுரை :
[ads-post]
538. விண் அகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல்
பண் அகத்து இனிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இம் மலை இறை கொண்டு ஈண்டி
அண்ணல் அம் களிற்றின் உச்சி அருங் கலம் வெறுக்கை ஈந்தார்
விளக்கவுரை :
539. மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான்
இந்திரத் திருவில் ஏய்ப்பக் குலவிய புருவத்தாட்கு
வந்து அடை பான்மை மண் மேல் இராசமா புரத்து என்றான்
விளக்கவுரை :
540. அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்பக்
கவனம் கொள் புரவிக் கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்று ஆம் கொல் அன்று கொல் அறியல் ஆகாது
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே
விளக்கவுரை :