சீவக சிந்தாமணி 511 - 515 of 3145 பாடல்கள்
511. வினை அது விளைவின் வந்த வீவு அரும் துன்பம் முன்னீர்க்
கனை கடல் அழுவம் நீந்திக் கண் கனிந்து இரங்கல் வேண்டா
நனை மலர்ப் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையுமின் நீவிர் எல்லாம் நீங்குமின் அச்சம் என்றான்
விளக்கவுரை :
512. பருமித்த களிறு அனானும் பை எனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பு இறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
உரும் இடித்து இட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்
விளக்கவுரை :
[ads-post]
513. ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும்
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் கொழித்துத்
தேம் பெற்ற பைந்தார் அவனைத் திரை உய்த்தது அன்றே
விளக்கவுரை :
514. நாவாய் இழந்து நடு ஆரும் இல் யாமம் நீந்திப்
போவாய் தமியே பொருளைப் பொருள் என்று கொண்டாய்
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் எனப் போய்ப் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்
விளக்கவுரை :
515. பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்தாங்கு
அருவரை மார்பன் அவலித்து இருந்தான்
விளக்கவுரை :