சீவக சிந்தாமணி 506 - 510 of 3145 பாடல்கள்
506. அரசனைக் கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறிக்
கரை கடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடைக் காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே
விளக்கவுரை :
507. களித் தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
துளித் தலை முகில்கள் ஈண்டித் தூங்கு இருள் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்றும்
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன்
விளக்கவுரை :
[ads-post]
508. எண் திசை வளியும் ஈண்டி எதிர் எதிர் கலாவிப் பவ்வம்
கொண்டு மேல் எழுவது ஒப்பக் குளிறி நின்று அதிர்ந்து மேகம்
தண் துளி பளிக்குக் கோல் போல் தாரையாய்ச் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்மின் என்று கூறும்
விளக்கவுரை :
509. இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்குப் போல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக தாம் நக்க போழ்து அவ்
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார்
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே
விளக்கவுரை :
510. ஆடகச் செம் பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் என்றான்
விளக்கவுரை :