சீவக சிந்தாமணி 351 - 355 of 3145 பாடல்கள்
351. பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள்.
விளக்கவுரை :
352. பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள்.
விளக்கவுரை :
[ads-post]
353. பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே.
விளக்கவுரை :
354. பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள்.
விளக்கவுரை :
விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்
355. மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே.
விளக்கவுரை :