சீவக சிந்தாமணி 346 - 350 of 3145 பாடல்கள்
346. தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே.
விளக்கவுரை :
347. கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே.
விளக்கவுரை :
[ads-post]
348. வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்.
விளக்கவுரை :
349. திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள்.
விளக்கவுரை :
350. திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள்.
விளக்கவுரை :